2026 பிபா உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து மெஸ்சி கூறியது என்ன..?

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

23-வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.

பியூனஸ் அயர்ஸ்,

கால்பந்து உலகின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த லியோனல் மெஸ்சி தற்போது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் விளையாடி வருகிறார்.

கால்பந்து உலகில் பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கும் லியோனல் மெஸ்சி தற்போது 36 வயதாகி விட்டதால் எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிப்பார் என்ற அச்சம் ரசிகர்களிடம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கோபா அமெரிக்கா தொடர் குறித்தும் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் பங்கேற்பதை குறித்தும் தற்போது மெஸ்சி பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "பிபா உலகக்கோப்பை துவங்க இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. அதற்குள் அந்த கோப்பையில் விளையாடுவேனா ? மாட்டேனா ? என்பது பற்றி தற்போது உறுதியாக கூறமுடியாது. ஐந்து உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிவிட்டேன், எனவே ஆறாவது உலகக்கோப்பையில் விளையாடினால் அது ஒரு சாதனையாக இருக்கும் என்றெல்லாம் என்னால் உலகக்கோப்பையில் விளையாட முடியாது.

அந்த சமயத்தில் என் உடல் தகுதி எப்படி உள்ளது என்பதை பொறுத்துதான் 2026-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பையில் நான் விளையாடுவேனா என்பது பற்றி முடிவெடுக்க முடியும். என்னால் சாதனைக்காக உலகக்கோப்பையில் விளையாட முடியாது. மேலும் தற்போது உறுதியாக நான் 2026 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்றும் சொல்லமுடியாது" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024