2047-ல் சிறந்த இந்தியா: பெண்கள் பங்கு முக்கியம் – நிர்மலா

by rajtamil
Published: Updated: 0 comment 13 views
A+A-
Reset

சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப். 4) கலந்துகொண்டார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன்

நிகழ்ச்சியில் பெண்கள் மேம்பாடு குறித்து அவர் பேசியதாவது,

2047 ஆம் ஆண்டு சிறந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

தொழில் தொடங்கும் பெண்களுக்கு 300க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் நாட்டில் உள்ளன. அதனை பெண்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

10 ஆண்டுகளில் மகளிர் எழுச்சிக்கான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வகுத்துள்ளார்.

பணத்தைத் தாண்டி பெண்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். பணத்தைத் தாண்டிய முன்னேற்றம் பெண்களுக்கு அவசியம்.

மகளிர் கையில் பணம் கொடுத்துவிட்டு பெண்களை முன்னேற்றுகிறேன் என்று பிரதமர் கூறவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த மகளிர் உரிமைத் தொகையை விமர்சித்து நிர்மலா சீதாராமன் பேசினார்.

You may also like

© RajTamil Network – 2024