Wednesday, September 25, 2024

23 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட உதகை மலை ரயில்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை 23 நாள்களுக்கு பிறகு இன்று தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து, மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பாறாங்கற்கள், மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.

மரங்கள் சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 9ம் தேதி முதல் நேற்று 31ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவு குறைந்ததாலும், ரயில் பாதையை பராமரிக்கும் பணி முடிவடைந்ததாலும் 23 நாள்களுக்கு பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரெயில் இன்று முதல் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மலை ரயில் வழக்கம்போல் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024