Thursday, October 17, 2024

24 மணிநேரத்தில் 6,120 அழைப்புகள்: சென்னை மாநகராட்சி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கடந்த 24 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த இரு நாள்களில் காலை, மதியம், இரவு உணவு என 11,84,410 பேருக்கு உணவு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மழையால் சென்னையில் 67 மரங்கள் விழுந்த நிலையில் அவை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் இருந்து 1368 பேர் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

300 இடங்களில் நிவாரண மையங்கள்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1,368 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6120 அழைப்புகள் வந்துள்ளன. இதன்மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 8 குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024