ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.
ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய சுற்று பயணமாக இது அமைந்திருக்கிறது.
இந்த தொடரின் டி20 போட்டிகள் டிசம்பர் 9, 11, 12 தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் டிசம்பர் 15, 17, 19 தேதிகளிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூடுதலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்க்க விருப்பம் தெரிவித்தது. இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, கிறிஸ்துமஸ் மறுநாள் (டிசம்பர் 26) அன்று பாக்ஸிங் டே டெஸ்டில் இரு அணிகளும் மோத உள்ளன. அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஜிம்பாபே அணி சொந்த மண்ணில் 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியது. இதைத்தொடர்ந்து 28 வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.
ஜிம்பாப்வே – ஆப்கானிஸ்தான் தொடர் விவரம்;
டி20 தொடர்;
முதல் டி20 போட்டி – டிசம்பர் 09
2வது டி20 போட்டி – டிசம்பர் 11
3வது டி20 போட்டி – டிசம்பர் 12
ஒருநாள் தொடர்;
முதல் ஒருநாள் போட்டி – டிசம்பர் 15
2வது ஒருநாள் போட்டி – டிசம்பர் 17
3வது ஒருநாள் போட்டி – டிசம்பர் 19
டெஸ்ட் தொடர்;
முதல் டெஸ்ட் போட்டி – டிசம்பர் 26 – 30
2வது டெஸ்ட் போட்டி – ஜனவரி 02 – 06 (2025)