Sunday, September 22, 2024

3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரும் பாஜக… சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவுபாஜக

பாஜக

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி வழங்கினார். அதனுடன் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தையும் பிரதமர் மோடி அளித்தார்.

இதை தொடர்ந்து, ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையை கலைத்து உத்தரவிட்டார். எனினும், புதிய அரசு பதவியேற்கும் வரை தங்களது பணிகளை தொடருமாறு பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை பெற்று, இன்றைய தினமே ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:
பாஜக பெற்றதும் ; இழந்ததும் – லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் சொல்லும் கணக்கு இதுதான்!

மோடியைத் தவிர வேறு ஒருவர் பிரதமரானால் ஆதரவு

விளம்பரம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சுமார் மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தனது போட்டியாளரான பாஜகவின் மாதவி லதாவை தோற்கடித்து ஐந்தாவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நரேந்திர மோடியைத் தவிர வேறு ஒருவர் பிரதமரானால், பாஜகவை ஆதரிக்க தயார் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.அசாதுதீன் ஓவைசி, மோடி பிரதமராகி விடக்கூடாது என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
central government
,
Lok Sabha Election 2024
,
Lok Sabha Election Results 2024

You may also like

© RajTamil Network – 2024