3 கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்.!

3 கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

2-ஆவது கட்டமாக செப்டம்பர் 25-ஆம் தேதியும், மூன்றாவது கட்டமாக அக்டோபர் ஒன்றாம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ராஜீவ் குமார் அறிவித்தார்.

விளம்பரம்
இதுவரை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 10 தமிழ் படங்கள்…
மேலும் செய்திகள்…

இதே போல, ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஒரே கட்டமாக அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார். இதையடுத்து, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Chief Election Commissioner
,
Election Commission
,
Election commission of India
,
Jammu and Kashmir

Related posts

Mumbai: Carpenter Booked For Not Returning ₹22 Lakh Mistakenly Transferred By NRI

Indian Railways Set To Operate Over 6,000 Special Trains For Upcoming Festive Season, From October 1 to November 30; Check Details Inside

Mumbai Shocker: Running Coaching Centre, 3 Brothers For Sexually Assaulting On Teen Student