Saturday, September 21, 2024

3-வது முறையாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராகும் பாக்யராஜ்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது.

சென்னை,

நடிகர் சிவகுமார், காதாசிரியர் கலைமணி, பாடலாசிரியர்கள் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன் எனப் பலரும் பங்கேற்ற எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் சங்கத்தின் மூத்த எழுத்தாளரான காரைக்குடி நாராயணன் கவுரவிக்கப்பட்டார். எழுத்தாளர் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார் என்பதற்காக அவரை கவுரவித்துள்ளனர்.

பெப்சியின் கீழ் இயங்கும் இச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜை செயல்பட்டு வருகிறார். தவிர இயக்குநர்கள் சரண், பேரரசு, சிங்கம்புலி, ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி, ராதாரவி பாலாஜி சக்திவேல், பட்டுக்கோட்டை பிரபாகர், அஜயன் பாலா, ஹேமமாலினி, பாடலாசிரியர் விவேகா என பலரும் பொறுப்புகளில் உள்ளனர். இந்த சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக்குழு சென்னையில் நடந்தது. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் இயக்குநர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தைத்தான் நம்பிக்கையுடன் நாடுவார்கள். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தை பொறுத்தவரையில் கதைப் புகார்கள் அத்தனையும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.

திரைப்பட சங்கங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு சங்கத்திற்கும் இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் இப்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாசத்தோடு நிறைவடைகிறது. அக்டோபரில் இருந்து புது நிர்வாகிகள் தேர்தல் நடத்தபட வேண்டும். ஆனால் 2026ல் இருந்து பெப்சியில் புது விதிமுறைகள் நடைமுறையில் வருவதால், இந்த இடைப்பட்ட காலத்திற்குத் தனியாக தேர்தல் நடத்தத் தேவையில்லை எனச் கூறியுள்ளது. ஆகையால் இப்படியொரு சூழலில் இப்போதுள்ள நிர்வாகிகளே, பதவியைத் தொடரலாம்னு பெப்சி அனுமதி கொடுத்துள்ளதால் பாக்யராஜ் 3-வது முறையாகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராகும் வாய்ப்பு உள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024