30 பந்துகளில் 30 ரன்கள் தேவை; உலகக் கோப்பை வெற்றி குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

30 பந்துகளில் 30 ரன்கள் தேவை; உலகக் கோப்பை வெற்றி குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் தான் எவ்வாறு உணர்ந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.ரோஹித் சர்மா

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் தான் எவ்வாறு உணர்ந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட, போட்டி அந்த அணிக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், இந்திய அணி அபார பந்துவீச்சால் வெற்றியை வசமாக்கியது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்ததாக ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் என்ன செய்தவென்று தெரியாமல் வெறுமையாக இருந்தேன். ஆனால், எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்கவில்லை. அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், கவனமாக செயல்பட்டு உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய கடமை இருந்தது. எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்த தருணத்தில் நாங்கள் வீசிய 5 ஓவர்கள், நாங்கள் எந்த அளவுக்கு அமைதியாக இருந்து உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தினோம் என்பதைக் காட்டியிருக்கும். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைக்கவில்லை. நாங்கள் போட்டியின் முடிவு குறித்து அச்சமடையவில்லை என்றார்.

You may also like

© RajTamil Network – 2024