Sunday, October 27, 2024

4வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! நிஃப்டியில் கரோனாவுக்கு பிறகு பெரும் வீழ்ச்சி!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இந்திய பங்குச் சந்தை வணிகம் 4வது நாளாக இன்றும் (அக். 24) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சற்று சரிவுன் காணப்பட்டன.

நிஃப்டி 50-ல் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5% சரிவு ஏற்பட்டுள்ளது. இது கரோனா காலகட்டத்துக்கு பிறகு ஒரே மாதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இன்றைய வணிகத்தில் நிஃப்டி ரியால்டி, ஐடி மற்றும் உலோகத் துறை ஆகியவை வீழ்ச்சி கண்ட நிலையில், பார்மா, நிதித் துறை நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.

18 நிறுவனப் பங்குகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 16.82 புள்ளிகள் சரிந்து 80,065.16 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.021% சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.10 புள்ளிகள் சரிந்து 24,399.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.15% சரிவாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் 134 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், 80,259.82 என்ற இன்றைய உச்சத்தை பதிவு செய்தது. எனினும் பிற்பாதியில் படிப்படியாகக் குறைந்து

79,813 புள்ளிகள் என்ற அதிகபட்ச சரிவையும் பதிவு செய்தது. வணிக நேர முடிவில் 16 புள்ளிகள் சரிந்து 80,065 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 18 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 12 நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன.

அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் 2.71%, டைட்டன் கம்பெனி 1.29%, எம்&எம் 1.18%, எஸ்பிஐ 1.09%, அதானி போர்ட்ஸ் 1.05%, என்டிபிசி 0.89%, எச்டிஎஃப்சி வங்கி 0.80%, பவர் கிரிட் 0.72%, பஜாஜ் ஃபைனான்ஸ் 0.65%, ஆக்சிஸ் வங்கி 0.60% உயர்வுடன் காணப்பட்டன.

இதையும் படிக்க | தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

இதேபோன்று ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் நிறுவனப் பங்குகள் -5.80% சரிவைச் சந்தித்தன. இதற்கு அடுத்தபடியாக நெஸ்ட்லே இந்தியா 2.95%, ஐடிசி -1.81%, மாருதி சுசூகி -1.62%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.60%, இன்ஃபோசிஸ் -0.54% சரிந்திருந்தன.

நிஃப்டி நிலவரம்

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.10 புள்ளிகள் சரிந்து 24,399.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.15% சரிவாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் 24,412.70 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது. அதிகபட்சமாக 24,480.65 புள்ளிகள் வரையில் உயர்ந்த நிலையில், 24,341.20 புள்ளிகள் வரை சரிவையும் சந்தித்தது. இது இன்றைய நாளின் அதிகபட்ச சரிவாகும். வணிக நேர முடிவில் 36 சரிந்து 24,399 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் பிராமல் பார்மா நிறுவனப் பங்குகள் 17.40% உயர்வுடன் காணப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக சோனா பிஎல்டபிள்யூ 13.30%, ஆஸ்டர் டிஎம் ஹெல்த் 10.30%, அதானி கேஸ் 7.79%, அதானி வில்மர் 6.93% ஐடிபிஐ வங்கி 4.33% வரை உயர்ந்திருந்தன.

இதேபோன்று கேபிஐடி டெக் -13.69%, விஐபி -7.18%, எச்யூஎல் -5.80%, எஸ்கோர்ட் -5.59%, பிர்லாசாஃப்ட் -5.32%, திரிவேனி டர்பைன் -5.20%, எஸ்பிஐ லைஃப் -4.71% ஆகியவை சரிவுடன் காணப்பட்டன.

2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குறிப்பிடத்தக்க எந்தவொரு வீழ்ச்சியும் இல்லாமல் சீராக உயர்ந்து, முந்தைய சாதனைகளை முறியடிக்கும் அளவுக்கு உச்சத்தை எட்டிய இந்திய பங்குச்சந்தை தற்ப்போது தலைகீழ் மாற்றத்தை எதிர்கொள்கிறது. கடந்த 4 நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024