Friday, September 20, 2024

40 மில்லியன் டன் இடிபாடுகள்: அகற்றவே 15 ஆண்டுகள் ஆகும்! போரில் காஸாவின் அவலம்!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

40 மில்லியன் டன் இடிபாடுகள்: அகற்றவே 15 ஆண்டுகள் ஆகும்! போரில் காஸாவின் அவலம்!போரில் இடிந்த கட்டடக் குவியல்களை முழுவதும் அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என்கிறது ஐ.நா. அவை.போரில் இடிந்த குடியிருப்பின் முன்பு காஸா சிறுமிபிடிஐ

இஸ்ரேல் தாக்குதலால் காஸா நகரம் முழுவதுமே சேதமடைந்துள்ள நிலையில், கட்டட இடிபாடுகள் மட்டுமே 40 மில்லியன் டன் அளவில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

கப்பற்படையுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இடிபாடுகளை அகற்றினால் கூட, இடிந்த குவியல்களை முழுவதும் அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் எனவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீனிய மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மகத்தான சவாலை ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்ட முடிவுகள் குறிப்பிடுகின்றன.

ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் திட்டம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் படி, காஸா நகரில் 1,37,297 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், நகரின் மொத்த கட்டடங்களில் இது பாதிக்கும் மேற்பட்ட அளவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கால் பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

250 முதல் 500 ஹெக்டர் பரப்பளவிலான நிலத்தில் ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில், எவ்வளவு மறுசுழற்சி செய்ய முடியும் என்பதைப் பொறுத்து, இடிபாடுகளைக் கொட்டுவது அவசியம் என மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் மேம்பாட்டுத் திட்ட கணக்கீட்டின்படி, காஸா நகரின் மறு உருவாக்கத்துக்கு 40 பில்லியன் (டாலர்) செலவாகும் என்றும் இதற்கு 16 ஆண்டுகள் ஆகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவின் மறுவாழ்வுக்கான முன்கூட்டியே திட்டமிடலுக்கான நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக ஐ.நா.வின் இந்த அந்த மதிப்பீடு, வெளியிடப்பட்டது

மேலும் இந்த மாகாணத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் வளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதால், 44 ஆண்டுகால வளர்ச்சியை அழித்து 1980களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஐ.நா. அவையின் அதிகாரி, காஸாவின் நிலப்பரப்பு மொத்தமாக மாறியுள்ளது. இதுவரை 907 கிலோ அளவிலான வெடிகுண்டுகள் நிலப்பரப்பின் மீது வீசப்பட்டுள்ளதால், நிலப்பரப்பின் தன்மை முழுவதும் மாறியுள்ளது.

இதனால், நிலப்பரப்பில் உள்ள பழுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், குடிநீர் விநியோகம் பல இடங்களில் பல இடங்களில் சிரமமாகியுள்ளது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், சாலைகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

இதன் விளைவாக, காஸாவின் மறுகட்டமைப்புக்காக ஐ.நா. மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளால் கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை விட இரு மடங்கு தேவை தற்போது எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் இராக்கைச் சேர்ந்த சுரங்க சேவை அதிகாரி பேஹ்ர் லோதம்மர் கூறியதாவது, சராசரியாக 10% வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் நிலத்தில் இருக்கின்றன. அவை அவ்வபோது வெடிக்கவும் செய்கின்றன. அவற்றை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஸாவில் இடிந்த கட்டடங்களில் 65% குடியிருப்புப் பகுதிகள். இந்த இடிபாடுகளை அகற்றுவதில் மிகுந்த கவனம் மற்றும் பொறுமை தேவை. ஏனெனில், இடிபாடுகளில் வெடிக்காத நிலையில் அதிக எண்ணிக்கையிலான குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் வகையிலான ஆயுதங்கள் இருக்கலாம்.

தற்போது வாரத்துக்கு 10 முறையாவது இடிபாடுகளில் உள்ள குண்டுகள் ஆங்காங்கே வெடிக்கின்றன. இவை வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் மூலம் கண்டறிந்து அகற்றப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024