Saturday, September 21, 2024

50 ஆண்டுகளாக வற்றாத ஆச்சரியக் கிணறு: எங்கிருக்கு தெரியுமா..? .

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

50 ஆண்டுகளாக வற்றாத ஆச்சரியக் கிணறு: எங்கிருக்கு தெரியுமா..? .50 ஆண்டுகளாக வற்றாத ஆச்சரியக் கிணறு: எங்கிருக்கு தெரியுமா..?     .

பல கிராமங்களின் வாழ்வாதாரங்களில் முக்கியமான ஒன்றாக கிணறுகள் இருக்கின்றன. ஒரு காலத்தில் தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டம், ராமகுண்டத்தில் உள்ள கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்டு வந்த நல்ல தண்ணீரையே மக்கள் குடித்து வந்தனர். காலப்போக்கில் நகரங்கள் வளர்ச்சியடைந்து, நகராட்சி அல்லது மாநகராட்சி மூலம் நல்ல தண்ணீரை வழங்கியதால், இந்த ஊற்று கிணறுகள் கிட்டத்தட்ட மக்கள் மனதிலிருந்து மறைந்து விட்டன. ஆனால், இந்த ஊரில் உள்ள கிணற்றில் எப்போதுமே தண்ணீர் நிறைந்து காணப்படும். அங்குள்ள மக்களும் இந்த கிணற்றை பாதுகாத்து வருகின்றனர். இந்த கிணற்றின் பின்னால் உள்ள வரலாற்றை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

விளம்பரம்

பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தில் உள்ள பிபவர் ஹவுஸ் சௌராஸ்தாவில் உள்ள ஓ சாய் ஹோட்டலின் கிணற்றுக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ராமகுண்டத்தை சுற்றியுள்ள 30 கிராம மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு இந்தக் கிணற்றை பயன்படுத்தி வந்தனர். அன்றைய காலத்தில் 30 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கிய இந்த ஊற்று, இன்றும் வாகன ஓட்டிகளின் தாகத்தை தணித்து வருகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து குடிநீருக்காக ஊற்று கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துச் சென்றனர். சில சமயம் கிணறு முழுவதும் சேறு நிரம்பியிருக்கும். அப்படியான சமயங்களில் தண்ணீர் எடுக்க மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த அறிந்த ஹனுமய்யா என்ற நபர், தனது சொந்தப் பணத்தை செலவு செய்து கிணற்றின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அப்போது இங்கு ஒரு பெரிய அரச மரம் ஒன்றிருந்தது. இந்த காரணத்திற்காகவே அப்போதிருந்த மக்கள் இந்த அரச மரத்தை ராவி செட்டு உட பாவி என்று அழைத்தனர்.

விளம்பரம்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள்.!
மேலும் செய்திகள்…

ஒரு காலத்தில் பல கிராமங்களின் தாகத்தை தணித்த ஊட்டா பாவியை இன்று யாருமே பயன்படுத்துவதுமில்லை; அதை கண்டுகொள்வதுமில்லை. இதற்கிடையில் சாய் ஹோட்டலின் மேலாளர் அப்சல் இந்த கிணற்றை அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்து வருகிறார்.

சில கிராமங்களில் கோடைக்காலம் வந்துவிட்டாலே ஊற்றுக் கிணறுகள் நீரின்றி முற்றிலும் வற்றிவிடும். ஆனால் அரச மரக்கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்தக் கிணற்று தண்ணீரின் சுவை 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ அப்படியேதான் இன்றும் உள்ளது.

விளம்பரம்

ஃபில்டர் தண்ணீரை விட இந்தக் கிணற்று தண்ணீர் அதிக சுவையில் இருக்கும் என்றும் இதுதான் இந்தக் கிணற்றின் தனிச்சிறப்பு என்றும் மக்கள் கூறுகின்றனர். அதனால்தான் என்னவோ பயணிகள் அல்லது வாகன ஓட்டிகள் இந்தக் கிணற்று தண்ணீரை குடிக்க விரும்புவதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெறகிளிக்
செய்க
https://tamil.news18.com/photogallery/tamil-nadu/how-to-apply-tnpsc-exam-vacancy-notification-for-group-2-and-group-2a-posts-tnpsc-exam-group-exam-full-details-government-jobs-lax-gwi-1496949.html

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Local News
,
Telangana

You may also like

© RajTamil Network – 2024