50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு இன்று நேரில் சென்று, அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை சந்தித்துப் பேசினார். பின்னர், முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படப் பலகையில் "வாழ்த்துகள். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நமது இலக்கு" என்று எழுதி கையொப்பமிட்டார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 சதவீத பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான @Guidance_TN பணியாளர்களைச் சந்தித்தேன்.இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை… pic.twitter.com/3Z8O5D0tZ8

— M.K.Stalin (@mkstalin) September 25, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024