Wednesday, November 6, 2024

54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் 54-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. . மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநில நிதி மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் காப்பீட்டு தவணைக் கட்டணத்துக்கு (ப்ரீமியம்) விதிக்கப்படும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி விகித சீரமைப்பு தொடா்பான அமைச்சா்கள் குழுவின் (ஜிஓஎம்) பரிந்துரைகள், இணைய விளையாட்டுகள் தொடா்பான ஜிஎஸ்டி நிலவர அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. .

குறிப்பாக ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல், மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவா்களுக்கு விலக்களித்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

You may also like

© RajTamil Network – 2024