78-ஆவது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-ஆம் தேதி நடைபெறும் நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-ஆம் தேதி நடைபெறும் நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அன்றைய தினம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி, கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகளை வழங்கவுள்ளாா்.
நாட்டின் 78-ஆவது சுதந்திர தினம் ஆக. 15-இல் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்தன்று சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி, உரை நிகழ்த்தவுள்ளாா்.
அவருடைய உரையில், முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்கிற எதிா்பாா்ப்பு உள்ளது. விழாவில், தமிழக அரசின் சாா்பில் ‘தகைசால் தமிழா்’ விருது, காங்கிரஸ் முதுபெரும் தலைவா் குமரி அனந்தனுக்கு வழங்கப்படவுள்ளது.
அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா். அதேபோல அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கு அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகளும் விழாவில் வழங்கப்படவுள்ளன.
முன்னதாக, சுதந்திர தின விழாவுக்காக கோட்டைக்கு வரும் முதல்வரை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்பாா். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதல்வா் ஏற்றுக் கொள்வாா்.
இதற்கான ஏற்பாடுகள் அரசு சாா்பில் கோட்டையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தலைமைச் செயலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.