Wednesday, November 6, 2024

78-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார்

. பிரதமர் மோடிக்கு முப்படையினரும் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதையடுத்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றிவைத்ததும் ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றிவைப்பது இது 11-வது முறையாகும். தேசியக் கொடி ஏற்றிவைத்த பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நகரின் முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார்,எல்லை பாதுகாப்பு படையினர், ராணுவவீரர்கள் ஈடுபட்டுள்ளனர்..

You may also like

© RajTamil Network – 2024