Tuesday, September 24, 2024

90% பேரால் பதில் சொல்ல முடியாத ஹார்வர்டு பல்கலை.யின் கேள்வி!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்ட கேள்வி என்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு கேள்வி பலரின் மண்டையை பிய்த்துக்கொள்ள வைத்துள்ளது.

கேட்பதற்கு மிக எளிதான கேள்வி போன்று தோன்றினாலும், சற்று கணக்கு தெரிந்தவர்களால் மட்டுமே போட முடியும். அதிலும் ஒரு டிவிஸ்ட் இருப்பதால், அதனை சரியாக யோசித்தால் மட்டுமே அந்த கணக்கையும் சரியாக போட முடியும் வகையில், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் இந்த கேள்வி கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உங்களால் இந்த கேள்விக்கு விடை காண முடியுமா? என்ற கேள்வியோடு இந்த கேள்வி இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது.

அதாவது கேள்வி இதுதான், 7 ஆண்கள் உள்ளனர், அவர்களுக்கு 7 மனைவிகள். ஒவ்வொரு ஆண் மற்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் 7 பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்படியானால் ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் உள்ளனர்? என்பதுதான்.

சொல்லப் போனால்… ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

முயற்சி செய்யலாமா?

ஒருவேளை இந்த கேள்விக்கு நம்மால் பதிலளிக்க முடியும் என்று நினைத்தால்.. முயற்சி செய்து பார்க்கலாம்.

இந்த கேள்வி வைரலாகியிருப்பதற்குக் காரணம் என்னவென்றால், இதனை பல வழிகளில் கணக்கிடலாம் என்பதே.

முதலில், இதற்கு விடை 63 என பலரும் பதிவிட்டிருக்கிறார்கள். அதாவது 7 ஆண்கள், 7 பெண்கள், ஒவ்வொரு தம்பதிக்கும் 7 பிள்ளைகள் (7×7=49) என்றால் 7+7+49=63 என்பதே பதிலாக இருக்கும்.

சிலரோ, 7 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 14 பேர். ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் 7 பிள்ளைகள் என்றால், 14 x7 = 98 பேர் என்று கணக்கிடுகிறார்கள்.

ஒரு சிலரோ, 7 ஆண்கள், அவர்களுக்கு தலா 7 மனைவிகள். அதில், ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு மனைவிக்கும் தலா 7 பிள்ளைகள். அப்படியானால் 7x7x2 = 98. மொத்த எண்ணிக்கை 112 என்று விடை கூறுகிறார்கள்.

இப்படியே.. நீள்கிறது கணக்கு. உண்மையில் இந்த கணக்குக்கு ஒரு முடிவே இல்லை எனலாம். இதனை எப்படி பிரித்துப்போட்டாலும் ஒரு பதில் கிடைக்கலாம். அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.

You may also like

© RajTamil Network – 2024