வெகு விமரிசையாக நடைபெற்ற அனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் ஹல்தி விழா

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

வெகு விமரிசையாக நடைபெற்ற அனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் ஹல்தி விழா!வெகு விமரிசையாக நடைபெற்ற அனந்த் அம்பானி மற்றும் ராதிகாவின் ஹல்தி விழா!

மும்பையில் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் மற்றும் ராதிகாவின் ஹல்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பா, நீதா அம்பானி தம்பதியரின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

பாப் இசையமைப்பாளர் ஜஸ்டின் பீபர் கலந்து கொண்ட ஆடம்பரமான “சங்கீத்” மற்றும் கிருஹ சாந்தி பூஜை ஆகியவற்றை தொடர்ந்து நேற்று தங்கள் ஹல்தி விழாவைக் கொண்டாடினர்.

மும்பையில் அம்பானி இல்லமான அன்ட்டிலியாவில் கோலாகலமாக நடைபெற்ற ஹல்தி விழாவில் குடும்ப உறுப்பினர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அம்பானி குடும்பத்தார் விருந்தினர்களை உபசரிப்புடன் வரவேற்றனர். விழாவில், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் கோல்டன் கிளாசிக் ஹைதராபாத் குர்தாவில் நீதா அம்பானி காணப்பட்டார்.

விளம்பரம்

முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, மருமகள் கிரிஷா ஷா அம்பானியுடன் வருகை தந்தார். முகேஷ் அம்பானியின் சகோதரி தீப்தி சல்கோகரும் கலந்து கொண்டார். முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் விழாவில் பங்கேற்றார்.

சல்மான் கான், ரன்வீர் சிங் ஆகியோர் வழக்கம்போல் தங்கள் வருகையால் விழாவில் கலகலப்பை கூட்டினர்.

The handsome #RanveerSingh was photographed at #AnantAmbani and #RadhikaMerchant’s haldi ceremony. ✨#FilmfareLenspic.twitter.com/6ci0AU4sFL

— Filmfare (@filmfare) July 8, 2024

விளம்பரம்

ஜான்வி கபூர், சாரா அலி கான், அர்ஜுன் கபூர், மனுஷி சில்லர், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் பிரத்யேக ஆடைகளில் வலம்வந்து விழாவை அலங்கரித்தனர்.

அலங்கரிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

#SalmanKhan attends #AnantAmbani and #RadhikaMerchant’s haldi ceremony. ✨#FilmfareLenspic.twitter.com/Na7Nz1eSiK

— Filmfare (@filmfare) July 8, 2024

விளம்பரம்

ஜூலை 12 ஆம் தேதி ஜியோ வேர்ல்ட் சென்டரில் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெறவுள்ளது. பிரமாண்டமான திருமணத்திற்குப் பிறகு, ஜூலை 13 ஆம் தேதி ஆசீர்வாத் விழாவும், ஜூலை 14 ஆம் தேதி பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Anil Ambani
,
Isha Ambani
,
mukesh ambani

You may also like

© RajTamil Network – 2024