நியூஸ் 18 நெட்வொர்க் முன்னெடுக்கும் ‘ப்ராஜெக்ட் ஒன் ட்ரீ’ பிரச்சாரம்!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

Project One Tree: வரும் தலைமுறைக்காக பூமியை பாதுகாப்போம்… நியூஸ் 18 நெட்வொர்க் முன்னெடுக்கும் ‘ப்ராஜெக்ட் ஒன் ட்ரீ’ பிரச்சாரம்!மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான நியூஸ் 18, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையாக, ஒவ்வொரு இந்தியரையும் ஒரு மரம் நடுவதற்கு அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கமான ‘புராஜெக்ட் ஒன் ட்ரீ’ தொடங்கப்பட்டது.

பூமியின் எதிர்காலம் நம்முடைய கைகளில்தான் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. நமது வருங்கால சந்ததிகளுக்காக இயற்கையை பாதுகாத்து அவர்களும் பயன்படுத்தும்படி செய்வது நம்முடைய கடமையாகும். இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்கு பார்வை, நல திட்டங்கள் உள்ளிட்டவை வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.

விளம்பரம்

மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இந்தியாதான் முன்னணியில் இருக்கும். இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு மிக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற அடிப்படையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அத்துடன் குறுகிய கால வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்துதலிலும் வெற்றிகரமாக செயல்படுகிறது மத்திய அரசு.

சூரிய சக்தியை பயன்படுத்துவது, எரிபொருள், தண்ணீர் மேலான்மை, நிலையான விவசாய கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், இமய மலை சுற்றுச் சூழல் அமைப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

விளம்பரம்

குறிப்பாக எரிபொருள் சேமிப்பு, மாற்று எரிபொருட்களை அறிமுகப்படுத்துதல், கார்பன் வெளியீட்டை குறைத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் வெளியீட்டை முழுமையாக கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Project One Tree, a movement to restore our planet’s green cover and ensure a sustainable future for all. Together, let’s fight climate change and sow the seed for a healthier world. Join News18 Network and let each one of us plant one and remember to nurture nature.… pic.twitter.com/AOoE3iL6hO

— News18 (@CNNnews18) July 8, 2024

விளம்பரம்

உலகின் மற்ற பகுதிகள் போன்று இந்தியாவிலும் பருவ நிலை மாற்றங்களால் பாதிப்புகள் ஏற்பட்டன. வெப்ப நிலை உயர்வு, நீண்ட நாட்களுக்கு காணப்பட்ட வெப்பக்காற்று, காட்டுத் தீ, வெள்ளங்கள் உள்ளிட்டவை பருவ நிலை மாற்றங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளாகும். இவற்றை மற்ற நாடுகளை போன்று இந்தியாவும் உணர்ந்துள்ளது. எனவே இதுபோன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களும் பங்கேற்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்திற்கான இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

விளம்பரம்

ஒவ்வொரு தனிநபரும் தங்களால் முடிந்த அளவுக்கு இயற்கையை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். அத்துடன் இயற்கையை பேணி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இதனால் மட்டுமே நம் எதிர்கால தலைமுறைக்கு பூமியை பாதுகாப்புடன் விட்டுச் செல்ல முடியும். அது நம் கடமையும் கூட. இதுவரை இல்லாவிட்டாலும் இன்றிலிருந்து நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும்.

அந்த வகையில் இந்த ஆண்டு , உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்துள்ளார். எளிமையான, செயல்படுத்தக்கூடிய இதனை அனைவரும் பின்பற்றலாம். எனவே இத்தகைய விழிப்புணர்வு பரப்புரையில் இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான நியூஸ் 18 பங்கேற்று, ஒரு மரம் திட்டம் என்பதை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஒரு மரத்தை நட்டு பராமரித்து வளர்த்தெடுக்க வேண்டும். பூமியின் பாதுகாப்புக்காகவும், எதிர்கால சந்ததியின் வளமான வாழ்வுக்காகவும் இந்த விழிப்புணர்வு பரப்புரையில் இந்தியர்கள் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என நியூஸ் 18 நெட்வொர்க் அழைப்பு விடுக்கிறது. இந்த திட்டத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து நியூஸ் 18 தளங்களில் அப்டேட்டுகள் வெளியாகும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
network 18
,
News 18
,
Project One Tree

You may also like

© RajTamil Network – 2024