Monday, October 21, 2024

தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுகிறது- ராமதாஸ்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

இந்தியா என்ற 'குடி'அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;

எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியா என்ற 'குடி'அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று போராடியதன் பயனாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள், நம்மை மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறிவிட்டு வெளியேறினார்கள்.

விடுதலை மட்டும் போதாது, மக்களை மக்களே ஆளும் நிலை வரவேண்டும் என்ற நோக்குடன் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்தியாவை 'குடி'அரசு நாடாக நமது தலைவர்கள் அறிவித்தார்கள். குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது.

குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு.குடியரசு என்றால் சந்துபொந்துவிடாமல் எல்லா இடங்களிலும் மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்கச்சொல்லும் அரசு என்பது இப்போதுதான் புரிகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேரை கொல்லும் டாஸ்மாக் சாராயம் மட்டுமின்றி, அவ்வப்போது கொத்துகொத்தாக மக்களைக் கொல்லும் கள்ளச்சாராயமும் தலைவிரித்தாடுகிறது.

கேட்டால் அதில்தான் கிக் இருப்பதாக கூறுகிறார் ஒரு மூத்த அமைச்சர்.

என்னவோ, மதுவுக்கு அடிமையான மக்கள் நிறைந்த தமிழ்நாட்டில் பணி செய்வது எமனுக்குதான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. என தெரிவித்துள்ளார்.

'குடி'அரசு
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது
இந்தியா என்ற ‘குடி’அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று போராடியதன் பயனாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள், நம்மை… pic.twitter.com/dOq4cIDfWK

— Dr S RAMADOSS (@drramadoss) July 10, 2024

You may also like

© RajTamil Network – 2024