Saturday, September 21, 2024

லிவிங் டுகெதர் என்பது திருமணம் அல்ல – கேரள ஐகோர்ட்டு

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர், தன்னை குடும்ப வன்முறை செய்ததாக இளம்பெண் புகாரளித்தார். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள்,

இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது. லிவிங் டுகெதர் உறவில் பங்குதாரர் (பார்ட்னர்) என்று மட்டுமே கூற முடியும். அந்த உறவு திருமணம் அல்ல. துணையை கணவர் என்று அழைக்க முடியாது. சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது” எனக் கூறினர்.

You may also like

© RajTamil Network – 2024