Friday, September 20, 2024

டி20 உலகக்கோப்பை: இந்தியா இல்லை… இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் இவைதான் – லயன்

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகளை நாதன் லயன் கணித்துள்ளார்.

சிட்னி,

20 அணிகள் கலந்துகொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை ஆரம்பமாகி ஜூன் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதன் முதலாவது போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோத உள்ளன.

இந்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக பல முன்னாள் வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்தும், அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்தப்போகும் வீரர்கள் குறித்தும் தங்களது கணிப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான நாதன் லயன் இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகளை தேர்வு செய்துள்ளார். அதில் முதலாவதாக ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு வரும் என்று அவர் நாட்டுப்பற்றுடன் தேர்வு செய்துள்ளார். ஆனால் 2வது அணியாக பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "டி20 இறுதிப்போட்டிக்கு கண்டிப்பாக ஆஸ்திரேலியா வரும். ஏனெனில் நான் கொஞ்சம் ஒரு தலைபட்சமாக இருப்பேன். அவர்களுடன் பாகிஸ்தான் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளில் அவர்களிடம் தரமான ஸ்பின்னர்கள் மற்றும் மின்சாரம்போல் செயல்படக்கூடிய பாபர் அசாம் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதேபோல தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக மிட்செல் மார்ஷ் இருப்பார். அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே அசத்தக்கூடியவர்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024