Friday, September 20, 2024

படப்பிடிப்பில் விபத்து: பிரபல நடிகைக்கு எலும்பு முறிவு

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

தமிழில் ‘லெஜெண்ட்’ படத்தில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தலா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்

சென்னை ,

தமிழில் சரவணன் அருள் நடித்த 'லெஜெண்ட்' படத்தில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தலா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி உள்ளார். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ரவுத்தலா நடித்து வருகிறார். இதில் பாபிதியோல் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்காக ஐதராபாத்தில் சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. இதில் பங்கேற்று நடித்த ஊர்வசி ரவுத்தலா விபத்தில் சிக்கினார். அவருக்கு பலத்த அடிபட்டு காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக ஊர்வசி ரவுத்தலாவை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024