திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி செய்த மரியாதை!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

Anant Ambani-Radhika Merchant Wedding : திருபாய் அம்பானிக்கு அஞ்சலி செலுத்திய முகேஷ் அம்பானி!Anant Ambani-Radhika Merchant Wedding : திருபாய் அம்பானிக்கு அஞ்சலி செலுத்திய முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டிற்கு மும்பையில் இன்று திருமணம் நடைபெறுகிறது. அப்போது, திருமண அரங்கில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் புகைப்படம் வைக்கப்பட்டு, பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

விளம்பரம்

திருபாய் அம்பானி ஜூலை 6, 2002ல் காலமானார். முகேஷ் அம்பானியும், அவரது சகோதரர் அனில் அம்பானியும் குடும்பத்தின் விஷேச நிகழ்வுகளின்போது, தங்களது தந்தையை நினைவு கூர்வது வழக்கம். அதன்படி, திருபாய் அம்பானியை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில், அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவின்போது திருபாய் அம்பானியின் புகைப்படம் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:சிவபெருமானுக்கு பாலாபிஷேகம், விசேஷ பூஜை… அமித் திரிவேதியின் இசை நிகழ்ச்சி… களைகட்டும் அம்பானி வீட்டுத் திருமணம்!

இந்த புகைப்படத்திற்கு அருகில் விருந்தினர்கள் போஸ் கொடுப்பதற்காக சிவப்பு கம்பளம் போடப்பட்டிருந்தது. அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
mukesh ambani
,
Nita Ambani
,
Reliance Jio

You may also like

© RajTamil Network – 2024