தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் வீதியுலா.. பூரண கும்ப மரியாதையுடன் பக்தர்கள் வரவேற்பு

by rajtamil
0 comment 38 views
A+A-
Reset

ஆதீனமடத்தை சுற்றியுள்ள 4 வீதிகளில் பல்லக்கில் வலம் வந்த குருமகா சன்னிதானத்திற்கு பக்தர்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் பட்டணபிரவேச விழாவை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் பல்லக்கில் வீதியுலா சென்றார்.

முன்னதாக அவர் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஆதீன தம்பிரான்கள் புடை சூழ பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் பல்லக்கை சுமந்து சென்றனர்.

தொடர்ந்து ஆதீனமடத்தை சுற்றியுள்ள 4 வீதிகளில் பல்லக்கில் வலம் வந்த குருமகா சன்னிதானத்திற்கு பக்தர்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

விழாவில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டாம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், துழாவூர் ஆதீனம், நாச்சியார் கோயில் ஆதீனம், பல்வேறு ஆதீனகர்த்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

You may also like

© RajTamil Network – 2024