செங்கோட்டை-புனலூர் மின் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

செங்கோட்டை-புனலூர் மின் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்!செங்கோட்டை-புனலூர் மின் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சோதனை ஓட்டம்சோதனை ஓட்டம்

செங்கோட்டை – புனலூர் இடையே மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில், மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

செங்கோட்டை – புனலூர் இடையே மொத்தமுள்ள 49 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் முழு வீச்சில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த இந்த வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்மயமாக்கப்பட்டு, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கினால், இப்பகுதி மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 7 மலைகளை இணைக்கும் வகையில் 8 கண் பாலம், 5 கண் பாலம், 3 கண் பாலங்கள் மற்றும் 3 மலைக்குகைகள் இருந்ததால், இப்பாதையை பிராட் கேஜ் பாதையாக அகலப்படுத்தும் பணி ரயில்வேத் துறைக்கு பெரும் சவாலாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் மின்மயமாக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதையில் பிரமிக்க வைக்கும் குகைகள்!

பகவதிபுரத்தை அடுத்து உள்ள புளியரை என்ற இடத்தின் தரைப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கான சாலை "ந" என்ற வடிவில் வளைந்து செல்லும். இந்த சாலைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக ரயில் செல்லும்.

இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் முதல் குகை வரும். இது ஆரிங்காவு பகுதிக்குச் செல்வதற்காக மலையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும்.

கழுதுருட்டியினை ரயில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும்போது, பெரிய பாலம் ஒன்று வருகிறது. கழுதுருட்டி 13 கண் ரயில் பாலம் அது.

இங்கிருந்து 50 மீட்டர் தொலைவிலேயே இரண்டாவது குகை வரும். அடுத்த 100 மீட்டர் தொலைவில் மூன்றாவது குகை இருக்கும். இப்படியே தொடர்ந்து ஆறு குகைகள் வருகின்றன. இதையெல்லாம் தாண்டித்தான் புனலூர் ரயில் நிலையம் வருகிறது.

இந்த 49.38 தொலைவு ரயில் பாதையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளன. எனவே, இங்கு ரயில் குறைவான வேகத்தில்தான் செல்ல முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024