அசத்தல் நடனமாடிய அனந்த் – ராதிகா; உற்சாகத்தில் முகேஷ் அம்பானி

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

Anant -Radhika Wedding : உற்சாக நடனமாடிய அனந்த் – ராதிகா… கண் இமைக்காமல் பார்த்து ரசித்த முகேஷ் அம்பானி!Anant -Radhika Wedding : உற்சாக நடனமாடிய அனந்த் - ராதிகா... கண் இமைக்காமல் பார்த்து ரசித்த முகேஷ் அம்பானி!

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று நடைபெற்றது. அனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்டும் மாலை மாற்றிக் கொண்ட பிறகு மனதை கவரும் வகையில் நடனமாடி மகிழ்ந்தனர். அப்போது ராதிகா மெர்ச்சன்ட் நெற்றியில் முத்தமிட்ட ஆனந்த், அவருடன் தொடர்ந்து நடனமாடினார்.

திருமணத்திற்காக மணமகளை பிரபல பேஷன் டிசைனர் ரியா கபூர் வடிவமைத்திருந்தார். மறுபுறம் ஆனந்தின் கம்பீரமான திருமண ஆடையை பிரபல பேஷன் டிசைனர் ஷலீனா நதானி வடிவமைத்திருந்தார். திருமணத்திற்கு பின்பு அனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்டும் தங்களது உறுதிமொழியை பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்விளம்பரம்

”எங்கள் வீடு ஒரு இடமாக மட்டும் இருக்காது. அது எங்கள் அன்பையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும். நாங்கள் எங்கு இருந்தாலும், அது எங்களுடன் இருக்கும்” என்று ராதிகா உணர்ச்சிவசத்துடன் தெரிவித்தார். “ஸ்ரீகிருஷ்ணரின் ஆசியுடன் எங்கள் கனவுகளை ஒன்றாக்கி, நாங்கள் எங்கள் வீட்டை கட்டுவோம்” என்று அனந்த் அம்பானி உறுதியளித்தார்.

இதையும் படிங்க:
திருமண மேடையிலேயே சத்தியம் செய்த அனந்த்; பூரிப்படைந்த ராதிகா!

இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். இதில், அனந்த் மற்றும் ராதிகாவின் உறுதியேற்பு வீடியோவுடன் மண்டபத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
aakash ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Anil Ambani
,
Jio
,
mukesh ambani
,
Nita Ambani
,
Reliance

You may also like

© RajTamil Network – 2024