Anant -Radhika Wedding : ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன் உடைத்த ரகசியம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

Anant -Radhika Wedding : ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன் உடைத்த ரகசியம்Anant -Radhika Wedding : ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன் உடைத்த ரகசியம்

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மிகவும் பிரமாண்டமாக, கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், ஹாலிவுட் கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியன் மற்றும் அவரது தங்கை க்ளோ கர்தாஷியன் பங்கேற்றனர். இருவரும் திருமணத்திற்கு இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையை அணிந்து வந்திருந்தனர். இருவரின் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, இந்தியாவில் படப்பிடிப்பு ஒன்றை நடத்தப் போவதாக கிம் கர்தாஷியன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது இந்தியாவுக்கு வந்துள்ள இருவரும் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கர்தாஷியன் சகோதரிகள், தங்களை இந்தியாவிலும் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

SKIMS என்ற ஆடை நிறுவனத்தை நடத்தி வரும் கிம் கர்தாஷியன், அது தொடர்பான விளம்பரத்திற்காக படப்பிடிப்பை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வந்த கிம் கர்தாஷியனுக்கு, ஹோட்டல் ஊழியர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க:
ரஜினி, அமிதாப்பிடம் ஷாருக்கான் செய்த செயல் – சுவாரஸ்ய நிகழ்வுகள்

திருமண அரங்கில் கிம் கர்தாஷியனுக்கு நீடா அம்பானி சிறப்பான வரவேற்பை அளித்தார். கிம் கர்தாஷியன் மற்றும் லோரெய்ன் ஸ்வார்ட்ஸ் ஆகியோருடன் நீடா அம்பானி கைகோர்த்து நடந்து சென்றது, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Hollywood Actresses
,
mukesh ambani
,
Nita Ambani

You may also like

© RajTamil Network – 2024