Tuesday, September 24, 2024

பாக்மதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மிதக்கும் கிராமங்கள்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பாக்மதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மிதக்கும் கிராமங்கள்!வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்: பிகாரில் சாலைகள் துண்டிப்புபாக்மதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மிதக்கும் கிராமங்கள்!

பிகார் மாநிலத்தில் உள்ள பாக்மதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

பிகாா் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் மின்னல் தாக்கி அந்த மாநிலத்தில் 70 போ் பலியாகியுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் உள்ள பாக்மதி ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், வெள்ள நீரானது பள்ளிகளிலும் புகுந்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

பேரி மற்றும் பஸ்கட்டா கிராமங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், குடியிருப்புவாசிகள் மேலும் அவதிக்குள்ளாகினர்.

கிராமவாசி ஒருவர் கூறுகையில், ​​"நாங்கள் தண்ணீரில் உணவு சமைக்கிறோம், குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள். எங்கள் வீடுகளில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாம்புக்கு பயப்படுகிறோம், ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை, அரசு சார்பில் எங்களுக்கு உதவ யாரும் இங்கு வரவில்லை" என்று தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024