Tuesday, September 24, 2024

பிகார் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்..

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

பிகார் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்.. நாட்டின் கவனத்தை ஈர்த்த சங்கர் சிங்.. யார் இவர்?சங்கர் சிங்

சங்கர் சிங்

மக்களவைத் தேர்தலில்போது பாஜக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்து திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்ததால் அந்த தொகுதிகள் காலியாகின. இதனுடன், மேற்கு வங்க அமைச்சர் சதன் பாண்டே காலமானதால் அவரது மணிக்தலா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், ராய்கஞ்ச் தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மானஸ் குமார் கோஷை தோற்கடித்தார். பாக்தா தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் மதுபர்ணா தாக்கூர் 33,455 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பினய் குமார் பிஸ்வாஸை வென்றார்.

விளம்பரம்

ரணகாட் தக்ஷின் தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் முகுத் மணி அதிகாரி, பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் பிஸ்வாஸை விட 39,048 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மணிக்தலா தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் சுப்தி பாண்டே பாஜக வேட்பாளர் கல்யாண் சௌபேவை 62,312 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இதையும் படிக்க:
இந்தியாவில் மக்கள் தொகை 2060-ல் 170 கோடியாக அதிகரிக்கும் : ஐ.நா. அறிக்கை

இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றி மக்களின் வெற்றி என்றும், இந்த வெற்றி ஜூலை 21 அன்று கொண்டாடப்படும் எனவும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

விளம்பரம்

சுயேச்சை வேட்பாளர் வெற்றி

அதேபோல பிகார் மாநிலம் ருபாலி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஜக்கிய ஜனதா தள வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளார். ஜக்கிய ஜனதா வேட்பாளர் கலாதர் பிரசாத் 59,824 வாக்குகளும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிமா பார்தி 30,619 வாக்குகளும் பெற்ற நிலையில், சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,70 வாக்குகள் பெற்று 8246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.

1990களில் பிகார் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய போராளிகள் குழு தலைவர் பப்பு யாதவுக்கு எதிர்கோஷ்டியாக செயல்பட்டது பூட்டன் சிங் தலைமையிலான ராஜ்புத் போராளிக் குழு. 2000ஆம் ஆண்டில் பூட்டன் சிங் கொல்லப்பட்டதும் அந்த குழுவின் தலைவராக செயல்பட்டவர் சங்கர் சிங். 2005 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி சார்பில் போட்டியிட்டு ருபாலி தொகுதியில் வெற்றி பெற்ற சங்கர் சிங், பின்னர் துப்பாக்கியை கைவிட்டு முழுநேர அரசியலில் இறங்கினார்.

விளம்பரம்

சில மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏவாக இருந்த நிலையில், அடுத்த நடைபெற்ற நான்கு தேர்தல்களிலும் ருபாலி தொகுதியில் சங்கர் சிங் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் ருபாலி தொகுதி இடைத்தேர்தலில், சங்கர் சிங் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி வாகை சூடினார்.

பிகார் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட நிலையிலும், சுயேட்சையாக களம் கண்டு வெற்றி பெற்ற சங்கர் சிங் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bihar
,
Mamata Banerjee
,
TMC

You may also like

© RajTamil Network – 2024