Tuesday, September 24, 2024

நிறைய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்; ஆனால்… ஆண்டர்சன் குறித்து மனம் திறந்த ஆஸி. வீரர்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

நிறைய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்; ஆனால்… ஆண்டர்சன் குறித்து மனம் திறந்த ஆஸி. வீரர்!அண்மையில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.நிறைய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்; ஆனால்... ஆண்டர்சன் குறித்து மனம் திறந்த ஆஸி. வீரர்!படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

அண்மையில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2003 ஆம் ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை ஜேம்ஸ் ஆண்டர்சனையே சேரும். ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்டுகள்) மற்றும் ஷேன் வார்னேவுக்கு (708 விக்கெட்டுகள்) அடுத்தபடியாக 704 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். சர்வதேசப் போட்டிகளில் இதுவரை அவர் 991 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஸ்விங் பௌலர் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன்தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சாப்பல் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஸ்விங் பௌலராக (பந்துவீச்சாளர்) ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளார். நிறைய ஸ்விங் பௌலர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் ஆண்டர்சன் அளவுக்கு பந்தை ஸ்விங் செய்வதில்லை. பந்தை இரண்டு விதங்களிலும் (இன்ஸ்விங், அவுட்ஸ்விங்) ஸ்விங் செய்யும் அபார திறன் படைத்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பந்துவீச ஓடி வருகையில் பெரிய மாற்றமில்லாமலும் பேட்ஸ்மேன்களால் யூகிக்க முடியாத அளவிலும் இரண்டு விதமான ஸ்விங் பந்துவீச்சை அவரால் வெளிப்படுத்த முடியும். மற்ற பந்துவீச்சாளர்கள் எந்த விதமான ஸ்விங் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை பேட்ஸ்மேன்கள் கண்டிபிடித்து விடுவார்கள். ஆனால், ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்டர்சனின் இந்த திறன் அவரது மிகப் பெரிய பலமாகும்.

21 ஆண்டுகளாக முழு உடல்தகுதியுடன் மிகவும் உறுதியாக இருக்கிறார். திருமணம், குழந்தைகள் என வாழ்வில் பெரிய மாற்றங்கள் வந்தபோதிலும், அவரது உடல்தகுதியிலும், திறனிலும் எந்தவொரு தொய்வும் வந்துவிடவில்லை. ஆண்டர்சன் போன்ற வீரர் ஒருவரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இங்கிலாந்து அணி அவரை கண்டிப்பாக மிஸ் செய்யும் என்றார்.

You may also like

© RajTamil Network – 2024