Tuesday, September 24, 2024

7 மாதங்களாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண விழா

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

7 மாதங்களாக நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா கொண்டாட்டங்கள்!ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவின் 3 ஆம் நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பானி குடும்பத்தினருடன் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண விழாவில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பாரம்பரிய உடையில் வந்து, பலரின் கவனத்தை ஈர்த்தார்.

#WATCH | Guests including Rajinikanth, Rashmika Mandanna, Vidhu Vinod Chopra, Shahid Kapoor and his wife Mira Rajput arrive at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/IE4sOjbOqC

— ANI (@ANI) July 13, 2024

விளம்பரம்

அமிதாப் பச்சன் தனது பேத்தி நவ்யாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். சஞ்சய் தத் தனது குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிவப்பு கம்பள விரிப்பில் ரன்பீர் கபூர் ஸ்டைலாக போஸ் கொடுத்து சென்றார்.நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் வண்ணமிகு ஆடையில் வந்து பலரின் கண்களுக்கு விருந்து படைத்தார்.ஹேமமாலினி, சல்மான் கான், ஆலியா பட், அர்ஜூன் கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கௌரி கான், மகள் சுஹானா கானுடன் கலக்கலாக வந்து விதவிதமாக போஸ் கொடுத்தார்.

விளம்பரம்

#WATCH | Actor Shah Rukh Khan along with his family arrive at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/6zMFAk2Bkx

— ANI (@ANI) July 13, 2024

விளம்பரம்

நடிகைகள் மாதுரி தீட்சித், காஜல் அகர்வால், வித்யா பாலன், ரஷ்மிகா மந்தனா, ஷனாயா கபூர், திஷா படானி, அனன்யா பாண்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ், உலக அழகி மனுஷி சில்லர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விளம்பரம்

#WATCH | Actor Jacqueline Fernandez and Union Minister Chirag Paswan along with his family arrive at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/RL4DluGYlf

— ANI (@ANI) July 13, 2024

விளம்பரம்

சாரா அலி கான் தனது சகோதரருடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அஜய் தேவ்கன், ஹேமா மாலினி உள்ளிட்ட விருந்தினர்களும் மணமக்களை வாழ்த்த வந்தனர்.
நடிகை ஜான்வி கபூர், சகோதரி குஷி கபூர், ஷிகர் பஹாரியா, வேதாங் ரெய்னா ஆகியோருடன் கண்ணை பறிக்கும் ஆடையுடன் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றார்.
தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் தனது மனைவியுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ராம் சரண் உள்ளிட்ட விருந்தினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா ஜோடி, ஷாஹித் கபூர், மீரா ராஜ்புத் ஜோடி என நட்சத்திர தம்பதிகள் கலக்கலான உடையில் வந்தது அசத்தியிருந்தனர்.
இயக்குநர் கரண் ஜோஹர், மூத்த நடிகர் ஜீதேந்திரா, நடிகர் துஷார் கபூர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விளம்பரம்

#WATCH | Veteran Actor Jeetendra, actor Tusshar Kapoor and Film producer Ekta Kapoor arrive at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/kaVbtIdhul

— ANI (@ANI) July 13, 2024

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி மற்றும் மகளுடன் பாரம்பரிய உடையில் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

#WATCH | Guests including Karan Johar, Mahendra Singh Dhoni and Amitabh Bachchan arrive at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/tjLCUTna9J

— ANI (@ANI) July 13, 2024

சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் நிகழ்ச்சி வந்தார். சானியா மிர்சா உள்ளிட்ட விருந்தினர்களும் வந்திருந்தனர். அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் சுப ஆசிர்வாத நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் சூர்யக்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் மனைவியுடன் வந்து பங்கேற்றனர்.

#WATCH | Cricketer Jasprit Bumrah along with his wife Sanjana Ganesan arrive at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/yzV7qGRwlz

— ANI (@ANI) July 13, 2024

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், தனது ஸ்டைலில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டியும் பங்கேற்றார். விளையாட்டு வீராங்கனை மேரிகோம், பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரும் தனித்தனியாக வந்து அனந்த்-ராதிகா தம்பதிக்கு வாழ்த்து கூறினர்.

#WATCH | Andhra Pradesh Deputy CM Pawan Kalyan arrives at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/MBXAVuXHdC

— ANI (@ANI) July 13, 2024

முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், மூத்த அரசியல் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரும் தங்கள் வருகையை பதிவு செய்தனர். மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், தி கிரேட் காளி, பாகேஷ்வர் தீரேந்திர சாஸ்திரி உள்ளிட்ட விருந்தினர்களும் பங்கேற்றனர்.
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் தனது மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களும் நிகழ்ச்சியில் சங்கமித்தனர்.

#WATCH | International dignitaries including Former UK Prime Minister Tony Blair, FIFA President Gianni Infantino at Jio World Centre in Mumbai to attend Anant Ambani and Radhika Merchant’s ‘Shubh Aashirwad’ ceremony. pic.twitter.com/5pFl941tKg

— ANI (@ANI) July 13, 2024

அமெரிக்க தொலைக்காட்சி பிரபலங்கள் கர்தாஷியன் சகோதரிகள், விலையுயர்ந்த வைர நகைகளுடன் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆடைகளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அனந்த் மற்றும் ராதிகாவை ஆசிர்வதிக்க யோகா குரு ராம்தேவ் பாபா நேரில் வந்திருந்தார்.

தனது திருமணத்தையொட்டி, ரன்பீர் சிங் உள்பட தனது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான audemars piguet royal oak pc வாட்சை பரிசாக அளித்துள்ளார் மணமகன் அனந்த் அம்பானி. அனந்த் அம்பானி-ராதிகா திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிலையில், கடந்த 7 மாதங்களாக சராசரியாக 6 வாரங்களுக்கு ஒருமுறை என்ற வீதம் திருமண கொண்டாட்டங்களை நடந்தி வந்தனர் அம்பானி குடும்பத்தினர்.

குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் மாதம் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடந்த விழாக்களில் மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோ சாப் நிறுவன முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ் என உலக பிரபலங்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒட்டுமொத்த பாலிவுட்டும் சங்கமித்திருந்தது.
5 ஆயிரம் ட்ரோன்கள் மூலம், வந்தாரா எனப்படும் விலங்குகள் காப்பகத்தின் செயல்பாடு குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகி ரிஹானா பாடலுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதன்பிறகு, ஜாம்நகரில் உள்ள சொந்த கிராமத்தைச் சேர்ந்த 51 ஆயிரம் பேருக்கு முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் பிரமாண்ட விருந்து அளித்தனர்.
இத்தாலியிலிருந்து பிரான்ஸுக்கு சொகுசு கப்பலில் திருமணத்துக்கு முந்தைய விழா கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட சுமார் 800 பேர் கலந்துகொண்டனர்.

திருமணத்தையொட்டி, மும்பை அருகே பால்கர் பகுதியில் 50 ஜோடி ஏழைகளுக்கு கடந்த 2-ஆம் தேதி அம்பானி குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். மாங்கல்யம், புத்தாடைகள், சீர்வரிசைகள், ரொக்கம் ஆகியவற்றை ஏழை ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வழங்கினர். பின்னர் விருந்தினர்கள் பலரின் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக சிவ பூஜையை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் நடத்தியிருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் “சங்கீத்” என்று அழைக்கப்படும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உலக புகழ்பெற்ற பாடகர் ஜஸ்டினின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த 8 ஆம் தேதி அனந்த்-ராதிகாவின் ஹல்டி நிகழ்ச்சியும் பாரம்பரிய சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.

7 மாதங்களாக நடைபெற்ற பல்வேறு விழாக்களின் இறுதிகட்டமாக, மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மாநாட்டு மையத்தில் திருமண விழா களைகட்டியது. வாரணாசி போன்று வடிவமைக்கப்பட்டிருந்த திருமண அரங்கில் ஆயிரக்கணக்கான பிரபலங்களின் முன்னிலையில், உலகே வியக்கும் வகையில் அனந்த்-ராதிகாவின் திருமணம் நடைபெற்றது. பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும், கோலாகலமாக 3 நாட்களாக நடக்கும் இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழா, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

You may also like

© RajTamil Network – 2024