சென்னை உள்பட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

சென்னை, கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/FBAKXVbaZE

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 15, 2024

You may also like

© RajTamil Network – 2024