நோயாளி கொல்லப்பட்டதால் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

நோயாளி கொல்லப்பட்டதால் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி காலவரையற்ற வேலைநிறுத்தம்கோப்புப் படம்

தில்லி மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்து மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

தில்லியைச் சேர்ந்த ரியாசுதீன் என்பவர் வயிற்றுநோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜூன் 23ஆம் தேதியில் தில்லி குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ரியாசுதீனுக்கு நேற்று (ஜூலை 14) சிகிச்சையளிக்கப்பட்டு இருக்கும்போது சிகிச்சை அறையில் நுழைந்த ஒருவர், மருத்துவர்கள் கண்முன்னே ரியாசுதீனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். ரியாசுதீனைக் கொன்றவர் குறித்த தகவல்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ரியாசுதீன் மருத்துவமனையிலேயே கொல்லப்பட்ட சம்பவத்தினை அறிந்த மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். தில்லி நர்சிங் கூட்டமைப்பு மற்றும் பிற மருத்துவர் சங்கங்களின் ஆதரவுடன் இளநிலை மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, “இதன் முன்னரே ஒருமுறை மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பணிகள் திறம்படச் செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களுக்கு முழுப் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. '

மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகளை தில்லி அரசு புறக்கணித்து வருகிறது. தற்போது மருத்துவமனையிலேயே கொலை நடந்துள்ளது. ஆகையால், மருத்துவமனையின் பாதுகாப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தொடரும்” என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், மருத்துவமனையில் அவசரகால நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சௌரத் பரத்வாஜ், அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024