Saturday, September 21, 2024

மின் கட்டணம் உயர்வு: மின்சார வாரியம் விளக்கம்

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.4.60ல் இருந்து ரூ.4.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.6.15ல் இருந்து ரூ.6.45ஆக உயர்வு. 501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு. 601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.9.20ல் இருந்து ரூ.9.65ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உயர்த்தப்பட் மின் கட்டணம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, 1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக் கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்கிறது. வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024