கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவை நாடும் நிலைக்கு தள்ளப்பட்ட பாஜக !

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவை நாடும் நிலைக்கு தள்ளப்பட்ட பாஜக!கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவை நாடும் நிலைக்கு தள்ளப்பட்ட பாஜக!

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் நான்கு பேரின் பதவிக்காலம் நிறைவுற்றதால், மசோதாக்களை நிறைவேற்ற கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவை நாடும் நிலைக்கு பாஜக அரசு தள்ளப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3ஆவது முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இருப்பினும் பாஜக தனிப் பெரும்பான்மையை இழந்தது. இதே போன்று, மாநிலங்களவையிலும் தனது பலத்தை பாஜக இழந்துள்ளது.

245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில், தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 226 ஆக உள்ளது. நியமன எம்.பிக்களான ராகேஷ் சின்ஹா, ராம் ஷாகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆக குறைந்தது.

விளம்பரம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101ஆக குறைந்துள்ளது. 2 சுயேச்சைகள் மற்றும் 7 நியமன உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 110 ஆக உள்ளது.

கட்சிகளை பொறுத்தவரை, காங்கிரஸுக்கு 26 , திரிணாமுல் காங்கிரஸுக்கு 13, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு 11, ஆம் ஆத்மி மற்றும் திமுகவுக்கு தலா 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், இந்தியா கூட்டணியின் பலம் 87 ஆக உள்ளது. இவை தவிர, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணையாத பாரத் ராஷ்டிர சமிதி, அஇஅதிமுக கட்சிகளுக்கு தலா 4 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
அதிகரிக்கும் டிஜிட்டல் அபாயங்கள்… இணையப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் 2024?

பாஜக தலைமையிலான அரசு, எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற வேண்டும் என்றால், 114 பேரின் ஆதரவு தேவை. இதனால் பிற கட்சிகளின் ஆதரவையும் தேசிய ஜனநாயக கூட்டணி நாட வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பாஜகவிற்கான ஆதரவை வழங்கியது. தற்போதும், அதுபோல ஆதரவை தொடர்ந்தால், பாஜகவுக்கு 11 வாக்குகள் கிடைக்கும்.

இதே போன்று, ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின், பிஜூ ஜனதா தளமும் பாஜகவிற்கு ஆதரவு கரத்தை நீட்டி வந்தது. ஆனால், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவால் தோல்வியை சந்தித்த BJD, இம்முறை ஆதரவு அளிப்பது ஐயமே.

விளம்பரம்

இதனிடையே, மாநிலங்களவையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கும் 11 நியமன எம்பிக்களுக்கும் இந்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மகாராஷ்டிரா, அசாம், பிகார் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு இடங்களும், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலங்கானா, திரிபுராவில் தலா ஒரு இடமும் உள்ளது.

அசாம், பிகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் 7 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதே போன்று, மகராஷ்டிராவிலும் கூட்டணி பிரச்னையின்றி இருந்தால், மேலும் 2 இடங்கள் கிடைக்கலாம். இதன் மூலம் பாஜகவுக்கு 9 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விளம்பரம்
தளபதி விஜய்யின் வீடு, கார் மற்றும் முழு சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா.?
மேலும் செய்திகள்…

ஜம்மு காஷ்மீரில் 2014- ஆம் ஆண்டு கடைசியாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றால் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிரப்பப்படும்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Alliance
,
BJP
,
Rajya Sabha

You may also like

© RajTamil Network – 2024