சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்.டி.கிருஷ்ணகுமார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த கங்காபூர்வாலா, கடந்த மே மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள இரண்டு நீதிபதி இடங்களுக்கு புதிய நீதிபதிகள் இன்று நியமனம் செய்யப்பட்டனர்.

அதன்படி, சென்னை பொறுப்பு தலைமை நீதிபர் மகாதேவன் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024