Friday, September 20, 2024

பாதாமி குகைக் கோவிலில் வித்தியாசமான மகாவிஷ்ணு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

பாதாமி குகைக் கோவில்கள் ஆரம்பகால இந்திய குடைவரை கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று பாதாமி குகை கோவில்கள். பெங்களூருவில் இருந்து தென்மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதாமி நகரத்தில் இந்த கோவில்கள் உள்ளன. இது 2017-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்கள் ஆரம்பகால இந்திய குடைவரை கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

பாதாமியின் பழங்காலப் பெயர் வதாபி என்பதாகும். இது ஆரம்ப கால சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக செயல்பட்டது. சாளுக்கியர்கள் 6-ம்நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை, கர்நாடகாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில்கள் பல கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பாதாமி சாளுக்கியர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு கோவில்கள், தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா மாவட்டம் முடிமாணிக்யம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோவில்கள், இந்து வம்ச வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. அவை அந்தக் காலத்தின் பொதுவான கட்டிடக்கலை பாணிகளின் கலவையை வெளிப்படுத்துகின்றன. கோவில்களில் ஒன்றில், கருவறைக்குள் ஒரு சிவலிங்கத்தின் அடித்தளமாக செயல்படும் ஒரு பாண வட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு கோவிலில் விஷ்ணு சிலையை மீட்டெடுத்துள்ளனர். இங்கு நின்ற கோல நரசிம்மர், திரிவிக்ரமன், வாராகர் என்று விஷ்ணுவின் பல்வேறு உருவங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தாலும், சுருண்ட பாம்பின் மீது அமர்ந்த நிலையில் காலை தொங்கவிடாமல், குத்துக் காலிட்டதுபோல் தூக்கி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024