Monday, September 23, 2024

கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு..

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு… முக்கிய அம்சங்கள் என்ன?கோப்புப்படம்

கோப்புப்படம்

கர்நாடகாவில் கன்னடர்களுக்கே முன்னுரிமை தரும் வகையில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், பிற மாநிலத்தவர் அதிக வேலைவாய்ப்புகளை பறிப்பதாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்காக அம்மாநிலத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டியலிட உள்ளது.

இடஒதுக்கீடு எவ்வளவு?

கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் மேலாண்மை பதவிகளில் 75 சதவீதம், அதற்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்த இடஒதுக்கீடு ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களது வேலைக்கு பயன்படுத்தும் குரூப் ‘சி’, குரூப் ‘டி’ தொழிலாளர்கள் கன்னடர்களாகவே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
Swiggy, Zomato-வில் மதுபானங்கள் டெலிவரி? – டாஸ்மாக் கொடுத்த அதிரடி விளக்கம்

யார் கன்னடர்கள்?

இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

விளம்பரம்

அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீறினால் என்னவாகும்?

இந்த சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அரசு குறிப்பிட்டுள்ள இடஒதுக்கீடு வரும்வரை அந்த தனியார் நிறுவனம் தினமும் ரூ.100 அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
IT JOBS
,
Karnataka
,
reservation

You may also like

© RajTamil Network – 2024