Tuesday, September 24, 2024

ரேஷன் கார்டு வழங்க வெளிமாநில தொழிலாளர்கள் சரிபார்ப்பு பணிக்கு 1 மாதம் ‘கெடு’ – மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

புதுடெல்லி,

பணி காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், அந்தந்த ஊர்களிலேயே ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்வதற்காக பதிவு செய்வதற்கு 'இ-ஷ்ரம்' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், சுமார் 8 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவர்களை சரிபார்க்கும் பணியை முடித்து 4 மாதங்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் சுதன்சு துலியா, அசானுதின் அமானுல்லா ஆகிேயார் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மட்டுமே சரிபார்ப்பு பணியை முடித்துள்ளதாக மனுதாரர்களின் வக்கீல் சுட்டிக்காட்டினார்.

அதனால் கோபம் அடைந்த நீதிபதிகள், இன்னும் ஒரு மாதத்துக்குள் சரிபார்ப்பு பணியை முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட செயலாளர்களுக்கு சம்மன் அனுப்புவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். விசாரணையை ஆகஸ்டு 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024