Monday, September 23, 2024

7 முறை பாம்பு கடிக்கவே இல்லை.. விகாஸிற்கு மன ரீதியான பாதிப்பு

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

7 முறை பாம்பு கடிக்கவே இல்லை.. விகாஸிற்கு மன ரீதியான பாதிப்பு – உ.பி மருத்துவ அதிகாரி விளக்கம்விகாஸ்

விகாஸ்

உத்தரப்பிரதேசத்தில் 7 முறை பாம்பு கடித்ததாக கூறப்பட்ட விகாஸிற்கு மன ரீதியான பாதிப்புள்ளதாக உ.பி மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விகாஸ் துபே. இவரை கடந்த ஜூன் 2 ஆம் தேதி பாம்பு ஒன்று கடித்துள்ளது. வீட்டில் படுத்திருந்தவரை பாம்பு கடித்ததும், அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், குணமடைந்து வீடு திரும்பியவருக்கு அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் இருமுறை பாம்பு சீண்டியுள்ளது. மூன்றாவது முறை சிகிச்சை அளித்த மருத்துவர், பாம்பு கடியில் இருந்து தப்பிப்பதற்கு வேறு இடத்திற்கு சென்று தங்குமாறு இலவச டிப்ஸ் கொடுத்துள்ளார். இதையடுத்து, தனது கிராமத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இருந்தபோதும் விடாது கருப்பு என்பது போல், 4 ஆவது வாரமும் விகாஸை பாம்பு கடித்துள்ளது. என்ன செய்வது என்று தலைசுற்றிய இளைஞர், அடுத்தடுத்து தனது உறவினர்கள் வீட்டுக்கு இடம் பெயர்ந்தும், பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

விளம்பரம்

இதையும் படிங்க : தமிழகத்தில் நடப்பது என்ன? லிஸ்ட்டுடன் உள்துறை அமைச்சரை சந்தித்த ஆளுநர் ரவி!

இவ்வாறு என்ன நடக்கிறது என்று குடும்பத்தினர் குழம்பியுள்ள நிலையில், தொடர்ந்து 7 முறையும் வார இறுதி நாட்களிலேயே சொல்லிவைத்தது போல், பாம்பு கடித்ததை கேட்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விகாஸ் கூறுகையில், ஒவ்வொரு முறை பாம்பு சீண்டுவதற்கு முன்பு, தனதுக்கு கனவு வரும் என்று தெரிவித்துள்ளார். அதில், அபசகுணமாக எதையாவது குறிக்கும் வகையில் கனவில் எச்சரிக்கை சிக்னல் வரும் எனவும் கூறினார். ஒன்பதாவது முறை பாம்பு கடித்தால், நீ இறந்து விடுவாய் என கனவில் வந்த பாம்பு கூறியதாக வினோத கதை ஒன்றை விகாஸ் தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

இந்நிலையில், பாம்புக் கடிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்ததுடன், விகாஸ் எப்படி பாம்பு கடிக்கு ஆளாகிறார் என்பதை கண்டறிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி உ.பி.யைச் சேர்ந்த விகாஸை மீண்டும் மீண்டும் பாம்பு கடிக்கவில்லை. அவர் பாம்புப் பயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று டாக்டர் ஆர்.கே வர்மா உள்ளிட்ட குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இதன் மூலம் 7 முறை விகாஸை பாம்பு கடிக்கவில்லை என மருத்துவ குழு உறுதிப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
snake
,
uttar pradesh

You may also like

© RajTamil Network – 2024