Tuesday, September 24, 2024

தமிழகத்தில் நடப்பது என்ன? லிஸ்ட்டுடன் உள்துறை அமைச்சரை சந்தித்த ஆளுநர்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

தமிழகத்தில் நடப்பது என்ன? லிஸ்ட்டுடன் உள்துறை அமைச்சரை சந்தித்த ஆளுநர் ரவி!ஆளுநர் ரவி, அமித்ஷா

ஆளுநர் ரவி, அமித்ஷா

தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஆலோசித்ததாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் காரணிகள் குறித்தும் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து, அமித் ஷா மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக காவல் ஆய்வாளர் கைது

தமிழ்நாட்டில், கள்ளச்சாராய மரணம் 65க்கும் மேலாக உயர்ந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சென்னையில் நிகழ்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கொலையாளிகள், கொலையில் பிரதான எதிரி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது, அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த காவல் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து விளக்கப்பட்டதாக தெரிகிறது.

விளம்பரம்

மேலும் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் லிஸ்ட்டுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். முன்னதாக கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
RN Ravi
,
Tamil Nadu Governor

You may also like

© RajTamil Network – 2024