Tuesday, September 24, 2024

ஏழுமலையான் சிலை ரூ.3 லட்சம்… திருப்பதியில் புகழ்பெற்ற மர சிற்பக்கலை

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

ஏழுமலையான் சிலை ரூ.3 லட்சம்… திருப்பதியில் புகழ்பெற்ற மர சிற்பக்கலைஏழுமலையான் சிலை ரூ.3 லட்சம்... திருப்பதியில் புகழ்பெற்ற  மர சிற்பக்கலை

ஏழுமலையான் சிலை ரூ.3 லட்சம்… திருப்பதியில் புகழ்பெற்ற மர சிற்பக்கலை

நமது முன்னோர்கள் நமக்காக பல்வேறு கலைகளையும், திறன்களையும் விட்டு சென்று உள்ளனர். ஏற்கனவே நம்மளுடைய அலட்சியம் காரணமாகவும், ஒரு சில இயற்கை சீற்றங்களின் விளைவாகவும் அரிதான கலைகள் கிட்டத்தட்ட அழிந்து வருகிறது.

நவீன தொழில்நுட்பம் இருந்து வரும் போதிலும் ஒரு சில கலைகள் இன்னும் அழியாமல் உயிருடன் இருந்து வருகிறது. அப்படியான ஒரு கலை மர சிற்ப கலை. இது இன்று வரை திருப்பதியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு கலையாகும். அரிதாக செய்யப்பட்ட மரத்தால் ஆன சிலைகளுக்கு இங்கு அதிக டிமாண்ட் உள்ளது. வழக்கமான சிலையின் விலையும் இந்த மரச் சிற்ப சிலையின் விலையும் ஒரே மாதிரியாக உள்ளது.

விளம்பரம்

திருப்பதியை சேர்ந்த இந்த மாதிரியான மர கடவுள் சிலைகள் தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ளது. பால் என்பவர் துவாகரா பஜாரில் உள்ள ஒரு விழா கூடத்தில் இந்த மர சிற்ப சிலைகளை விற்பனை செய்து வருகிறார். 1000 ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரையிலான விலை கொண்ட மர சிற்ப கலைகள் தங்களிடம் இருப்பதாக மேனேஜர் ராஜு கூறுகிறார்.

வெங்கடேஸ்வர கடவுளின் ஒரே ஒரு சிலை 3 லட்ச ரூபாய் விலை மதிப்பு கொண்டது என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த மர சிற்பங்களை செதுக்குவதற்கு காட்டு தேக்கு பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

விளம்பரம்

மரத்தை செதுக்கி ஒரு தெய்வ சிற்பத்தை செய்வதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிறிய சிற்பங்களில் தொடங்கி பெரிய சிற்பங்கள் வரை அனைத்துமே இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.

தொழில்நுட்பத்தால் பல்வேறு அட்டகாசமான கலை சிற்பங்களை உருவாக்க முடியும் என்றாலும் கூட கைகளால் ஆன பொருட்களுக்கு எப்பொழுதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த கலைகளில் செதுக்குதல் என்பது மிகச் சிறந்த ஒரு கலையாக கருதப்படுகிறது. கைகளால் செதுக்கப்பட்ட சிலைகள் இன்றைய சமூகத்தில் மிக முக்கிய இடத்தை கொண்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: தபால் துறை வேலைவாய்ப்பு: திருநெல்வேலி அஞ்சல் அலுவலங்களில் 89 காலியிடங்கள்

இன்றைய சமூகத்தில் மக்கள் தங்களுடைய சமூகத்தை விடுத்து தங்களுக்கு விருப்பமான வேலைகளை செய்து அதன் மூலமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தான் ஒரு சில கலைகள் இன்னும் கதைகளில் மட்டுமே வாழ்கின்றன. அழிந்து வரும் கலைகளின் இந்த பட்டியலில் மர சிற்பங்களை செதுக்கும் கலையும் உள்ளது. கடந்த சில வருடங்களாக அழியும் தருவாயில் இருந்து வரும் இந்த கலையை திருப்பதியில் உள்ள ஒரு சில மக்கள் காப்பாற்றி வருகின்றனர் என்பது மனதிற்கு ஓரளவு ஆறுதல் தரும் விதமாக உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Local News
,
Tirupathi

You may also like

© RajTamil Network – 2024