ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து அணி அறிவிப்பு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டப்லின்,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி வரும் 25ம் முதல் 29ம் தேதி வரை பெல்பாஸ்டில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பால் ஸ்டிர்லிங், மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அயர்லாந்து அணி விவரம்:

ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், கவின் ஹோய், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரேஸ், ஆண்டி மெக்பிரைன், பேரி மெக்கார்த்தி, ஜேம்ஸ் மெக்கலம், பிஜே மூர், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங்.

Ireland have named their squad for the historic one-off Test at home against Zimbabwe #IREvZIMhttps://t.co/AA05MTj6bd

— ICC (@ICC) July 17, 2024

You may also like

© RajTamil Network – 2024