சர்ச்சை ஐஏஎஸ் பூஜா மீது அடுத்த அதிரடி…. அரசு முக்கிய ஆணை

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

சர்ச்சை ஐஏஎஸ்அதிகாரி பூஜா கேத்கர் மீது அடுத்த அதிரடி…. அரசு முக்கிய ஆணைஐஏஎஸ்அதிகாரி பூஜா கேத்கர்

ஐஏஎஸ்அதிகாரி பூஜா கேத்கர்

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து எழுந்த நிலையில், அவரை மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து மஹாராஷ்ட்ரா மாநில அரசு விடுவித்துள்ளது. மேலும் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி அகாடமிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பூஜா மீதான அதிரடி நடவடிக்கை பின்னணி என்ன?

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு பயிற்சி காலத்திலேயே, அவர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டி சென்றுள்ளார். பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை கேட்டு அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளார்.

விளம்பரம்

இதுகுறித்து தலைமை செயலாளருக்கு, புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்தும் மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் சான்றிதழ்களை அளித்து இவர் மோசடி செய்ததும் தெரியவந்தது.

ஓபிசி பிரிவினருக்கான பிரிவில் தேர் வெழுத வேண்டுமானால் அவரது குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால், அவரது தந்தை முன்னாள் அரசு உயர் அதிகாரி என்பதும், அவருக்கு 40 கோடியில் சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. பணி நியமனத்துக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய மருத்துவ பரிசோதனையிலும், இவர் ஆஜராகவில்லை என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

விளம்பரம்

இந்த புகார்கள் குறித்து விசாரிக்க, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலாளர் மனோஜ் திவிவேதி தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழு பூஜா கேத்கர், எவ்வாறு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி சான்றிதழ் பெற்றார், பார்வை குறைபாடு மற்றம் மனகுறைபாடு சான்றிதழ் ஆகியவை உண்மையானதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், வாஷிம் மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து பூஜாவை மஹாராஷ்ட்ரா மாநில அரசு விடுவித்து உள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க:
ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரின் மாஸ்டர் பிளான்… வெளியான திடுக்கிடும் தகவல்!

மேலும், முசோரியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் பயிற்சி மையத்திற்கு பூஜா உடனடியாக திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் பூஜா கேத்கர் தான் நிரபராதி என்றும், உண்மை விரைவில்வெளிவரும் என்றும், தனது வழக்கில் அரசுக் குழு இறுதி முடிவை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Maharashtra
,
Pune

You may also like

© RajTamil Network – 2024