Tuesday, September 24, 2024

உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துஉத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து நேரிட்டது.கோப்புப்படம்

கோண்டா: உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில சண்டிகர் – திப்ருகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழு விரைந்துள்ளது.

திப்ருகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடிகஞ்ச் – ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டதாகவும், காயமடைந்தவர்கள் விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரயில்வே மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

உ.பி. யில் நடந்த ரயில் விபத்து தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 0361 – 2731621, 0361 – 2731622, 0361 – 2731623 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

You may also like

© RajTamil Network – 2024