Tuesday, September 24, 2024

வங்கதேசத்தில் வன்முறை: இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

வங்கதேசத்தில் வன்முறை: இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அரசுப் பணி இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.வங்கதேசத்தில் வன்முறை

வங்கதேசத்தில் மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய குடிமக்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும், இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கதேசம் – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர். ஆனால், ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறையாக மாறியுள்ளது.

இந்த வன்முறைகளில் 3 மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள், போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், விடுதிகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டக்கா உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் சாலைகளில் போராட்டத்தை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், 24 மணிநேர அவசர உதவி எண்ணையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024