Tuesday, September 24, 2024

மாதச் சம்பளதாரர்களுக்கு பட்ஜெட்டில் வெளியாகப் போகும் குட்நியூஸ்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

Union budget 2024 : அமைக்கப்படுகிறதா 8வது ஊதியக்குழு? – மாதச் சம்பளதாரர்களுக்கு பட்ஜெட்டில் வெளியாகப் போகும் குட்நியூஸ்Union budget 2024 : அமைக்கப்படுகிறதா 8வது ஊதியக்குழு? - மாதச் சம்பளதாரர்களுக்கு பட்ஜெட்டில் வெளியாகப் போகும் குட்நியூஸ்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதில், தொழில்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாதச் சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.பி.யாதவ், மத்திய அரசு செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்றும், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், 18 மாத அகவிலைப்படியை விடுவித்தல், கொரோனா தாக்கத்தின்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முடக்கப்பட்ட நிவாரணத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் உள்ளன.

விளம்பரம்

பொதுவாக, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், படிகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து, பரிந்துரை செய்வதற்காக, ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறையும் மத்திய ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை நவம்பர் 19, 2015ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்டு, ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன.

10 ஆண்டு முறையின்படி, 8வது ஊதியக்குழுவை இந்த ஆண்டு அமைத்து, அதன் பரிந்துரைகளை ஜனவரி 1, 2026 இல் அமல்படுத்த வேண்டும். ஆனால், ஊதியக்குழுவை அமைப்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

விளம்பரம்

இதையும் படிங்க:
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் 5 வங்கிகள் – உங்களுக்கு தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு, 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அத்துடன், கருணை பணி நியமனங்களில் உச்சவரம்பு மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றையும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகுமா? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Budget 2024
,
FINANCE MINISTER NIRMALA SITHARAMAN
,
Nirmala sitaraman
,
PM Modi
,
Prime Minister Narendra Modi
,
Salary

You may also like

© RajTamil Network – 2024