Saturday, September 21, 2024

மாலுக்கு வேஷ்டியில் வந்த முதியவருக்கு அனுமதி மறுப்பு.!

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

மாலுக்கு வேஷ்டியில் வந்த முதியவருக்கு அனுமதி மறுப்பு.. வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட அரசு உத்தரவு!மாலுக்கு வேஷ்டியில் வந்த முதியவருக்கு அனுமதி மறுப்பு.. வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட அரசு உத்தரவு!

கர்நாடகாவில் வேட்டி அணிந்து சென்ற விவசாயியை அனுமதிக்க மறுத்த தனியார் வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜிடி மாலில் உள்ள திரையரங்கில் படம் பார்ப்பதற்காக கர்நாடகாவின் காவேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பகிரப்பா தனது மகனுடன் சென்றார். வெள்ளை வேட்டி சட்டையுடன், தலையில் முண்டாசு கட்டிச் சென்ற முதியவர் பகிரப்பாவை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்க முடியாது என காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் கண்டனத்துக்கு உள்ளானதையடுத்து, வணிக வளாக நிர்வாகம் மன்னிப்பு கோரியது. வணிக வளாக உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த கர்நாடக காவல்துறை, வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட உத்தரவிட்டது.

விளம்பரம்

இதையடுத்து, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அழைத்து விவசாயி பகிரப்பாவின் பேசிய போது, தன்னை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க:
தமிழ்நாடு அரசின் 4 சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!

இதைப்போலவே, கடந்த பிப்ரவரி மாதம் இதே பெங்களூருவில் வேட்டி சட்டை அணிந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கச் சென்றவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, மெட்ரோ ரயில் சாதாரண மக்களுக்கானது இல்லையா என்ற விவாதம் எழுந்தது.

இதே போன்ற வேட்டி சர்ச்சை, தமிழ்நாட்டிலும் நிகழ்ந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்ற, அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் 2 பேர் வேட்டி அணிந்து சென்றதால், கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

இதையடுத்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, வேட்டிக்கு தடைவிதித்தால் உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை இயற்றினார்.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் உள்ள பெருமாள் கோயில் அன்னதானத்தில், நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காதது சர்ச்சையான நிலையில், நரிக்குறவர் வீட்டிற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார். இதே போல, சென்னையில் உள்ள திரையரங்கில் நரிக்குறவர்களை படம்பார்க்க அனுமதிக்காததும் சர்ச்சையானது.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தென்னிந்திய நடிகைகள்.!
மேலும் செய்திகள்…

அணிந்திருக்கும் உடையையும், தோற்றத்தையும் வைத்து ஒருவரை தடுக்கும் நிகழ்வு நவீன தீண்டாமை எனவும், அந்த மனநிலையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Karnataka
,
Tamilnadu

You may also like

© RajTamil Network – 2024