Wednesday, September 25, 2024

மைக்ரோசாஃப்ட் பிரச்னை: கைகளால் எழுதப்படும் போர்டிங் பாஸ்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மைக்ரோசாஃப்ட் பிரச்னை: கைகளால் எழுதப்படும் போர்டிங் பாஸ்மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.முடங்கியது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்

புது தில்லி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் முடங்கிய பிரச்னையால், உலகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விமானங்களுக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் கைகளால் போர்டிங் பாஸ் கைகளால் எழுதிக்கொடுக்கப்பட்டு வருகிறது.

இண்டிகோ, ஆகாசா ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறக்கத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முடங்கியிருப்பதால், சென்னை விமான நிலையத்தின் கணினி சர்வர்களில் ஏற்பட்ட பிரச்னையால் சென்னையில் மட்டும் 27 விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கணினியில் ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் ஏற்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் துறைகளில் பெரும் பாதிப்பு ஏறப்ட்டுள்ளது.

விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் பெங்களூருவில் இன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சில விமான நிலையங்களில், பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு விமானத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

என்ன நடக்கிறது, எப்போது விமானம் புறப்படும் என்று தெரியாமல், முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பில் உள்ளனர். இன்று விமானத்துக்காக முன்பதிவு செய்திருக்கும் பயணிகளும், தங்களது விமானப் பயணம் நடைபெறுமா என்ற சந்தேகத்தில் உதவி எண்களைத் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள்.

கோவா முதல் தில்லி செல்ல வேண்டிய விமானங்களில், பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்கள் வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பயணிகள் பதிவிட்டுள்ளனர். கைகளால் போர்டிங் பாஸ்கள் எழுதப்படுவதால் பல மணி நேரம் விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

ஆகாசா ஏர்லைன்ஸ் இது குறித்து கூறுகையில், எங்களது சேவை அமைப்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு காரணமாக, விமான டிக்கெட்டுகள் முன்பதிவு, செக்-இன் மற்றும் அடிப்படை விஷயங்களில் தற்காலிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கணினி இல்லாமல் விமான நிலைய ஊழியர்களே பல்வேறு பணிகளையும் மேற்கொண்டிருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் கொடுத்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024